For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகையில் வெள்ள அபாயம்- கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vaigai Dam
தேனி: தமிழகம் முழுதும் கனமழை பெய்துவருவதால் அணைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் வைகை ஆற்றில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 71 அடி கொள்ளவு கொண்ட வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் சில அடிகளே உள்ளதால் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 15149 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 1260 கனஅடியாகவும் உள்ளதாக பொதுபணித்துறை அறிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் பாதுகாப்பு

வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களை கடந்து கடலில் கலக்கிறது. வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

English summary
With the Vaigai dam fast reaching its full reservoir level following rains, flood alert has been issued and people on the river banks have been asked to move to safer places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X