For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலின் இந்திய கேப்டன் திடீர் மரணம்!

By Chakra
Google Oneindia Tamil News

Uss Harry S Truman and Tushar R Tembe
வாஷிங்டன்: அணு சக்தி மூலம் இயங்கும் அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஹாரி ட்ரூமென் கப்பலின் கேப்டனான துஷார் தெம்பே (49) கப்பலிலேயே திடீரென இறந்தார்.

மும்பையைச் சேர்ந்த துஷார் சிறு வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். டெக்ஸாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் அமெரிக்கக் கடற்படையின் விமானப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் யுஎஸ்எஸ் ஹாரி ட்ரூமென் விமானம் தாங்கிக் கப்பலின் கமாண்டிங் ஆபிசராக பொறுப்பேற்றார்.

நேற்று கப்பலில் இருந்த இவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு கப்பலிலேயே முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் விர்ஜீனியாவில் போர்ட்ஸ்மெளத் பகுதியில் உள்ள போன்ஸ் செக்கோர்ஸ் மோரிவியூ மெடிக்கல் சென்டருக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது திடீர் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.

துஷாருக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

English summary
India-born Captain Tushar Tembe, Commanding officer of the American nuclear powered aircraft carrier USS Harry S Truman, has suddenly died, the US Navy announced today. 49-year-old Tembe, a naval aviator, had assumed command of Truman only three months ago. Mumbai-born Tembe came to the US as a child and later graduated from Texas Tech University. Tembe is survived by his wife and two sons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X