For Daily Alerts
Just In
மஹிந்திரா சத்யம் லாபம் 10 மடங்கு உயர்வு
ஹைதராபாத்: ஐடி நிறுவனமான மஹிந்திரா சத்யத்தின் இரண்டாம் காலாண்டு காலாண்டு லாபம் ரூ 238 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2010-2011 காலாண்டை விட10 மடங்கு அதிகமாகும். இந்த காலகட்டத்தில் இது வெறும் ரூ 23.31 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
ராமலிங்க ராஜு கைதுக்குப் பிந்தைய காலகட்டத்தில் சத்யம் ஈட்டியுள்ள மிக அதிக லாபம் இதுவே.
மொத்த வருவாயைப் பொறுத்தவரை கடந்த காலாண்டில் ரூ 1,433.93 ஆக இருந்தது. இந்த காலாண்டில் ரூ 1,578 ஆக உயர்ந்துள்ளது.
இந்த காலாண்டில் புதிதாக 38 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இன்றைய தேதிக்கு சத்யம் பணியாளர்கள் எண்ணிக்கை 32,092 ஆக உள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!