For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பையில் விக்கிபீடியா தேசிய மாநாடு-18ம் தேதி தொடக்கம்

By Chakra
Google Oneindia Tamil News

Wikipedia
மும்பை: ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா மும்பையில் முதல் தேசிய மாநாட்டை நடத்தவுள்ளது.

சமீபத்தில் விக்கிபீடியா டெல்லியில் தனது முதல் அலுவலகத்தை ஆரம்பித்தது. இந் நிலையில், வரும் 18ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மும்பையில் மாநாட்டை நடத்தவுள்ளது.

மும்பை பல்கலைக்கழகத்தில் கான்வோகேசன் அரங்கில் நடக்கும் இந்த மாநாட்டில் விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து விக்கிமீடியா பிரிவின் தலைவர் அர்ஜூன் ராவ் சாவலா கூறுகையில், இந்தியாவில் விக்கிபீடியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 20க்கும் அதிகமான திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில் தான் விக்கிபீடியா தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The online encyclopaedia - Wikipedia, which has opened its first ever officein India, is going to hold its first ever national conference in the country. The three-day-long conference will be held in Mumbai from Nov 18. The founder of Wikipedia, Jimmy Wales also will attend the first ever WikiConference in India which will be organised at the Convocation Hall, University of Mumbai, Fort Campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X