For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட்டைத் தாண்டி பிற விளையாட்டுக்கள் பக்கம் திரும்பத் தொடங்கி விட்டனர் இந்தியர்-ஆனந்த்

Google Oneindia Tamil News

Viswanathan Anand
நீம்ரானா: இந்தியர்கள் இப்போதெல்லாம் கிரிக்கெட்டை மட்டும் பார்த்துக கொண்டிருப்பதில்லை. பிற விளையாட்டுக்களையும் அவர்கள் பார்த்து ரசித்து, ஆதரிக்கத் தொடங்கி விட்டனர் என்று கூறியுள்ளார் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விளையாட்டுத் துறை சமீப ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது என்பது எனது கருத்து. எப் 1 கார்ப்பந்தயத்திற்குக் கிடைத்த ஆதரவின் மூலம் இதை அறியலாம். கிரிக்கெட் போட்டிக்குக் கூடும் கூட்டத்தை விட அதிகமான கூட்டம் டெல்லியில் கூடியதை மக்கள் பார்த்தனர்.

எப்1 என்றில்லை, பல விளையாட்டுக்களின் மீதும் மக்கள் ஆர்வம் திரும்பத் தொடங்கி விட்டது. ஏற்கனவே செஸ் மீதும் மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதை மேலும் அதிகரிக்க முயல வேண்டும் என்றார் ஆனந்த்.

அடுத்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியில் தனது பட்டத்தைத் தக்க வைக்கும் முயற்சியில் ஆனந்த் தற்போது மும்முரமாக உள்ளார்.அந்தத் தொடரில் அவர் இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பான்ட்டை சந்திக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
World champion Viswanathan Anand felt that the perception of people in India towards sports in general is changing and said we need to try and capitalise on the swing. "I feel that Indian attitude to sports has been changing a lot over the years. It is not only recent F1, you can see that people are slowly following more and more diverse sports. So I think that is also what we have to try and capitalise on in chess," Anand said while emphasising upon the recent success of inaugural Indian Grand Prix.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X