For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுரங்க அதிபரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டினார் ஜெகன்: சிபிஐ விசாரணை தகவல்

By Siva
Google Oneindia Tamil News

கடப்பா: கடப்பா எம்.பி.யும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சுரங்க அதிபர் ஒருவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் என்ற தகவல் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஓபுலாபுரத்தில் கடப்பா எம்.பி.யும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்வது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பினாமிகள் பெயர்களில் சுரங்கத் தொழில் செய்து வரவதை சிபிஐ கண்டித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் சுரங்க தொழில் அதிபர் ஒய். சதீஷ் சிபிஐயிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பபதாவது,

நான் ஒய்.எம். மகாபலேஸ்வரப்பா அன்சன்ஸ் என்ற பெயரில் சுரங்க நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனம் ஜனார்த்தன ரெட்டியின் சுரங்கத்தையொட்டி உள்ளது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டியும் பினாமிகள் பெயரில் சுரங்கம் நடத்தி வருகிறார். நான் 1978ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரை சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து இருந்தேன். அதை ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு மறு குத்தகைக்கு கொடுக்குமாறு கேட்டார். இதற்காக என்னை பெங்களூருக்கு அழைத்தார். அங்கு சுரங்க உரிமைகளை தனது பினாமி நிறுவனங்களுக்கு கொடுத்து விடுமாறு வற்புறுத்தினார்.

நான் மறுத்ததால் என் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு எனக்கு படபடப்பும், ரத்த அழுத்த நோயும், இருதயக்கோளாறும் ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 6 மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஜெகனின் பினாமி நிறுவனங்கள் மூலம் அவரது மகதி நிறுவனத்திற்கு ரூ.49 கோடி, இந்திரா டெலிவிஷனுக்கு ரூ.30 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சட்டவிரோத சுரங்க ஊழலில் ஆந்திரா முன்னாள் சுரங்க இயக்குனர் வி.டி. ராஜகோபால், அவரது மருமகன் ராஜசேகர் ஆகியோருக்கும் தொடர்புள்ளது.

English summary
YSR congress chief Jaganmohan Reddy had threatened a mining baron with a pistol. Jagan compelled the baron to transfer his mining rights to his binami's companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X