For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறுமையை ஒழிக்கும் கண்டுபிடிப்புகள் அவசியம் – மன்மோகன் சிங் வலியுறுத்தல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் வறுமையை ஒழிக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் அமையவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். புது டெல்லியில் இந்திய கண்டுபிடிப்பு கவுன்சிலின் அறிக்கையை வெளியிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் நாட்டின் சமூக, பொருளாதார மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்னும் மிகப்பெரிய சவால்கள் நம்முன் உள்ளன. நம் நாட்டில் ஏழைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பணக்காரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே கண்டு பிடிக்கபடுகிறது இந்த நிலைமை மாற வேண்டும்.

வறுமை ஒழிப்பு

சுற்றுசூழல் ,விண்வெளி தொழில்நுட்பம், அணு ஆற்றல் மற்றும் வாகனங்கள் போன்றவற்றில் ஏராளமான கண்டுபிடிப்புகள் சாதனையை நிகழ்த்தி உள்ளோம். சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் கண்டுபிடிப்புகள் பெருக வேண்டும். வறுமையை ஒழிக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

English summary
New Delhi, Describing innovation as "a game-changer", Prime Minister Manmohan Singh Tuesday called for an inclusive model that benefits not only the rich but also the poor through poverty eradication, development of agriculture and health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X