For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாலேகான் குண்டுவெடிப்பு-7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை

Google Oneindia Tamil News

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 7 பேர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகாலமாக இவர்கள் ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து 9 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவதாக கோர்ட் அறிவித்தது.

கடந்த 2006ம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 5 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கோர்ட், 7 பேரை ஜாமீனில் விடுவி்க்க உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் தலா ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். இவர்கள் 7 பேரும் வெளிநாடு போகக் கூடாது என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.

மற்ற இருவருக்கும் வேறு குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவர்களால் விடுதலையாக முடியவில்லை.

மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, தீவிரவாத தடுப்புப் பிரிவு கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Seven of the nine accused in the Malegaon blast case are likely to be released on Tuesday after being in judicial custody for five years. The MCOCA court has agreed to grant bail to the accused. However, the final report in the case by the National Investigation Agency (NIA) is yet to be filed. The accused were arrested for orchestrating blasts in 2006 which claimed 31 lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X