For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுப் பணத்தை அரசு வீணடித்தால் தட்டிக் கேட்பது சிஏஜியின் கடமை- முரளி மனோகர் ஜோஷி

Google Oneindia Tamil News

MM Joshi
டெல்லி: பொதுமக்களின் பணத்தை, தேசத்தின் சொத்தை அரசு வீணடித்தால், அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பெரும் கடமை தலைமைக் கணக்கு அலுவலகத்திற்கு உண்டு என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி.

சிஏஜி எனப்படும் தலைமைக் கணக்கு அலுவலகத்தின் 150வது ஆண்டு விழாவையொட்டிநடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிஏஜி வினோத் ராய், ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஜோஷி பேசுகையில், சிஏஜி குழுவினரின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் பாராட்டுக்குரியவ. பொதுச் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, பொதுமக்களின் வரிப்பணம் அனாவசியமாக செலவழிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து அதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும் கடமை, பொறுப்பு சிஏஜிக்கு உண்டு.

சிலருடைய சுயநலத்திற்காக மக்களின் வரிப்பணம் சூறையாடப்படாமல் தடுக்க வேண்டிய கடமையும் அதற்கு உண்டு. ஆனால் சமீப காலமாக சில எம்.பிக்களும், சில மீடியாக்களும் சிஏஜி மீது அவதூறை ஏற்படுத்த முயல்கின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. அதன் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்க முயல்கின்றன. இது தவறானது.

எம்.பிக்களுக்கு எப்போதுமே உயரிய மரியாதையும், கெளவரமும் தரப்படுகிறது. அதேபோல நாட்டின் உயரிய அமைப்புகளில் ஒன்றான சிஏஜியின் செயல்பாட்டையும் நாம் மதித்தாக வேண்டும். அதன் கண்ணியத்தைசீர்குலைக்க முயலக் கூடாது.

அரசு தவறு செய்தால் அதை தடுக்க வேண்டிய கடமையிலிருந்து சிஏஜி ஒருபோதும் தவறக் கூடாது. அரசைக் கண்காணித்து வர வேண்டியது அதன் தார்மீக கடமையாகும் என்றார் ஜோஷி.

English summary
Murali Manohar Joshi, chairman of PAC this afternoon praised the CAG team for its diligence. Recently, the Prime Minister was among those who have suggested that the government's auditors have been exceeding their brief. "CAG is required to play a major role in reporting to parliament whether public assets are not sold to private players for a song. It is unfortunate that quite recently ... a section of the press and even some parliamentarians have tried to whittle down the credibility of the institution of the CAG," he remarked.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X