For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியாழனின் தண்ணீர் – நாசா விஞ்ஞானிகள் உறுதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப்பா" என்ற சந்திரனில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது. அதில் வியாழன் கிரகத்தில் பனிக்கட்டி படிவங்கள் இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பதில் சந்தேகம் எற்பட்டது.

யூரோப்பா சந்திரன்

இந்நிலையில், வியாழன் கிரகத்தில் உள்ள “யூரோப்பா" என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

“யூரோப்பா"வில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

English summary
NASA revealed today that new analysis of Jupiter's moon Europa is pockmarked by shallow lakes of liquid water. Scientists have long believed that the icy moon could have liquid water beneath its surface, responsible for creating the characteristically cracked surface of that moon, but new research has confirmed it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X