For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவி குறித்து அவதூறுப் பேச்சு- நித்தியானந்தா, ரஞ்சிதா மீது இந்து மக்கள் கட்சி தலைவர் வழக்கு

Google Oneindia Tamil News

கோவை: தனது மனைவி மதம் மாறி விட்டதாகவும, மனைவியைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவர் என்றும் கூறி தன்னையும், தனது மனைவியையும் குறித்து அவதூறாகப் பேசிய சாமியார் நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் மீது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.

கோவை கோர்ட்டில் இந்த வழக்கை அர்ஜூன் சம்பத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அர்ஜூன் சம்பத்தின் வழக்கறிஞர் கூறுகையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், தனது மனைவியையே கட்டுப்படுத்த முடியாத அர்ஜூன் சம்பத் மற்றவர்களைக் குறை கூறிப் பேசலாமா என்று பேசியுள்ளார் நித்தியானந்தா. அந்தப் பேச்சை ஆமோதிக்கும் வகையில் நடிகை ரஞ்சிதாவும் அப்போது உடன் இருந்துள்ளார்.

இதையடுத்து நித்தியானந்தாவின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், மன்னிப்பு கேட்கக் கோரியும் கடந்த 8.8.11 அன்று நித்தியானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதையடுத்து தற்போது கோவை கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதலாவது நீதித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றியும், தனது மனைவி குறித்தும் அவதூறாகப் பேசிய நித்தியான்தா, ரஞ்சிதா ஆகியோர் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கு வருகிற 23ம் தேதி விசாரணைக்கு வரும் என மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

English summary
Hindu Makkal Katchi leader Arjun Sampath has sued Nithyanantha and Actress Ranjitha for defaming his and his wife's name. He has filed a petition with Coimbatore first JM court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X