For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிளகாய் வத்தல் விலை சரிவு: பாமாயில், கடலை எண்ணெய் விலை உயர்வு

Google Oneindia Tamil News

Dry Red Chillies
விருதுநகர்: தேவை குறைவால் மிளகாய் வத்தல் விலை குண்டாலுக்கு ரூ. 800 வரை சரிந்துள்ளது. அதே சமயம் கடலை எண்ணெய், பாமாயில் விலை உயர்ந்துள்ளது.

மிளகாய் வத்தல் ஏற்றுமதிக்கான ஆர்டர் இல்லாததாலும், தேவை குறைந்துள்ளதாலும் குவிண்டாலுக்கு ரூ. 800 வரை விலை குறைந்துள்ளது. சங்கரன்கோவில் சம்பா மற்றும் ஏசி வத்தல் குவிண்டால் ரூ.8,800ல் இருந்து ரூ. 8000 ஆகவும், தரமான வத்தல் ரூ. 9,800ல் இருந்து ரூ. 9,000 ஆகவும் சரிந்துள்ளது.

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் பாமாயில் டின் ரூ. 880ல் இருந்து ரூ. 940 ஆக உயர்ந்துள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் உளுந்து (100 கிலோ) மூட்டைக்கு ரூ. 200 குறைந்துள்ளது.

உளுந்து 100 கிலோ லயன் ரூ. 4,200ல் இருந்து ரூ. 4,000 ஆகவும், பர்மா பருவட்டு ரூ. 4,250ல் இருந்து ரூ. 4,052 ஆகவும், பொடி ரூ. 3,800ல் இருந்து ரூ. 3,600 ஆகவும், உருட்டு உளுந்தப்பருப்பு லயன் ரூ. 6,200ல் இருந்து ரூ. 6,000 ஆகவும், பர்மா பருவட்டு ரூ. 5,800ல் இருந்து ரூ. 5,600 ஆகவும், பொடி ரூ. 5,400ல் இருந்து ரூ. 5,200 ஆகவும், தொளி ரூ. 5,000ல் இருந்து ரூ. 4,800ஆகவும் விலை குறைந்துள்ளது.

English summary
Red chilly prices have gone down as there is not much demand for that. Palmolein and groundnut oil prices have increased as the value of rupee against US dolar has gone down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X