For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை நாடாளுமன்றக் கூட்டம்-அத்வானி வீட்டில் பாஜக தலைவர்கள் அவசர கூட்டம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நாளை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கவிருக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் அக்கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் நடந்தது.

நாளை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கவிருக்கிறது. குளிர்கால கூட்டத் தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தொடரில் விலை உயர்வு, ஊழல் மற்றும் கருப்புப் பணம் குறித்து பிரச்சனை எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீட்டில் அக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடந்தது. இதில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, எஸ்.எஸ். அலுவாலியா, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, ஜஷ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத், சாந்தா குமார் மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

English summary
BJP leaders have assembled at LK Advani's house in Delhi today ahead of the winter session of the parliament. They have discussed about the party's strategy in this session. Senior leaders Sushma Swaraj and Arun Jaitley, SS Ahluwalia, Murli Manohar Joshi, Rajnath Singh, Venkaiah Naidu, Jaswant Singh, Yashwant Sinha, Ravishankar Prasad, Shanta Kumar and Ananth Kumar have attended this meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X