For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரைக்கு 315 ரூவா, கோவைக்கு 395 ரூவா, நெல்லைக்கு 440 ரூவா, நீண்டதூர பஸ்களில் ஏறவே மக்கள் அச்சம்!

By Chakra
Google Oneindia Tamil News

Tn Government Bus
சைக்கிளுக்கு 2 ரூவா, பைக்குக்கு 5 ரூவா, காருக்கு 10 ரூவா, பஸ்சுக்கு 100 ரூவா, ரயிலுக்கு 500 ரூவா, பிளேனுக்கு 1,000 ரூவா என்று மதுரையையே காண்ட்ராக்ட் எடுத்துவிட்டதாக சொல்லி கரணுக்கு பார்க்கிங் கட்டணம் சொல்வார் வடிவேலு..

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வும் அப்படித்தான் உள்ளது. கட்டணத்தை மனம் போல் உயர்த்தியுள்ளனர். அதிலும் நீண்டதூரம் செல்லும் பஸ்களின் கட்டணம் மிக மிக அதிகமாக உயர்ந்துள்ளது. கட்டணம் கிட்டத்தட்ட 2 மடங்காக உயர்ந்துவிட்டது.

அதிலும் சாதாரண பஸ், எக்ஸ்பிரஸ் பஸ் என்று எதையாவது கூறி கட்டணம் அதிகமாகவும் மிக அதிகமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் குழம்புவதோடு, கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாகி வருகின்றனர்.

பஸ் கட்டணத்தை உயர்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா ஜெயா டிவியில் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டுப் போனார். நகர, புறநகர் பேருந்துக் கட்டண உயர்வு மட்டுமே அப்போது விளக்கமாக சொல்லப்பட்டது.

ஆனால், நீண்டதூர பஸ்களின் கட்டண உயர்வு எவ்வளவு உயர்வு என்பதை அரசு தெளிவாக விளக்கவே இல்லை. ஒரு அரசாணை வந்தது. அது பற்றி மக்கள் படித்துத் தெரிந்து கொள்ளவதற்கு முன்பே கட்டணம் இரவோடு இரவாக உயர்ந்துவிட்டது.

கட்டண உயர்வு பற்றி அரசு பஸ்களின் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் இரவிலேயே வாய்மொழி உத்தரவு போட்டுவிட்டனர். இதனால், பஸ்சில் ஏறி அமர்ந்த பிறகு தான் கட்டணமே தெரிந்தது.

சென்னை-திருச்சி 2 மடங்கு:

சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ. 105 ஆக இருந்த சாதாரண பஸ் கட்டணம் ரூ. 195 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது. இது கிட்டத்தட்ட இரு மடங்காகும்.

அதே போல சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ. 175 ஆக இருந்த அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை-மதுரை கட்டணம் ரூ. 315:

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 200 ஆக இருந்த எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் இப்போது ரூ. 252 ஆகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 248ல் இருந்து ரூ. 315 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை-ஈரோடு கட்டணம் ரூ. 291:

சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரூ. 131 ஆக இருந்த எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் இப்போது ரூ. 233 ஆகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 215ல் இருந்து ரூ. 291 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சேலத்துக்கு ரூ. 240:

சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ. 115 ஆக இருந்த சாதாரண பஸ் கட்டணம் இப்போது ரூ.196 ஆகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 185ல் இருந்து ரூ. 240 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லை செல்ல 440 ரூபாய்-கோவைக்கு ரூ.395:

சென்னையிலிருந்து நெல்லைக்கு அல்ட்ரா டீலக்ஸ் கட்டணம் ரூ.440ஆகவும், கோவைக்கு ரூ.395ம், தஞ்சாவூருக்கு ரூ.280ம் வசூலிக்கப்படுகிறது.

பிற நகர்களுக்கான கட்டணம்:

சென்னை - கன்னியாகுமரி - ரூ.505 (பழைய கட்டணம் ரூ.380)

சென்னை - நாகப்பட்டினம் - ரூ.240 (பழைய கட்டணம் ரூ.180)

சென்னை - தூத்துக்குடி - ரூ.425 (பழைய கட்டணம் ரூ.315)

சென்னை - கும்பகோணம் - ரூ.225 (பழைய கட்டணம் ரூ.180)

சென்னை - தேனி - ரூ.355 (பழைய கட்டணம் ரூ.270)

சென்னை - செங்கோட்டை - ரூ.445 (பழைய கட்டணம் ரூ.330)

நகர பேருந்துகளில் முதல் ஸ்டாப்புக்கே கட்டணம் ரூ. 3:

அதே போல நகரப் பேருந்துகளில் ஏறும் இடத்திலிருந்து அடுத்த ஸ்டாப்புக்கான கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. இப்போது அது ரூ. 3 ஆகிவிட்டது. இது சாதாரண பஸ்சுக்கான கட்டணம், இதில் பஸ்சின் கலரைக் காட்டியும், எல்எஸ்எஸ் என்றும், பாயிண்ட் டூ பாயிண்ட் என்றும் எதையாவது சொல்லி குறைந்தபட்ச கட்டணமே ரூ. 3.50 ஆகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது சாதாரண பஸ்களை விட கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகம்.

அதிகபட்சமாக 28வது ஸ்டாப்புக்கு சாதாரண பஸ்சில் பழைய கட்டணம் ரூ.12. இப்போது அது ரூ.14.

டீலக்ஸ் பஸ்சில் டபுள் மடங்கு:

டீலக்ஸ் பஸ்களுக்கான கட்டணம் எல்.எஸ்.எஸ். பஸ்ஸை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. எல்.எஸ்.எஸ். பஸ்சில் கட்டணம் ரூ. 5 என்றால் டீலக்ஸ் பஸ்சில் ரூ. 10.

வால்வோ பஸ் ஏ.சி காத்துக்கு ரூ. 75:

வால்வோ ஏ.சி. பஸ்களை சொல்லவே வேண்டாம். அதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15, அதிகபட்ச கட்டணம் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவுக்கு ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நைட்ல வெளியே வராதீங்க..:

இரவு நேர பஸ்களுக்கான கட்டணம் பகல் நேர கட்டணத்தைவிட இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண பஸ்களுக்கு. அதுவே டீலக்ஸ் பஸ், எல்.எஸ்.எஸ். பஸ்சாக இருந்தால் கட்டணம் மேலும் இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

'மலையேறவும்' இரண்டு மடங்கு கட்டணம்:

மலைப் பகுதிகளில் ஓடும் டவுன் பஸ்களுக்கான கட்டணம், தரைப் பகுதியில் ஓடும் எல்.எஸ்.எஸ். பஸ்களின் கட்டணத்திற்கு சமமாக உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
The “unprecedented” bus fare hike has put the commuters from middle class and the poor in rude shock in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X