For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் என்ஜினியர், ஷேர் ஆட்டோ டிரைவர் காதல் திருமணம்-பாதுகாப்பு கோரி போலீஸில் தஞ்சம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மாதம் ரூ.70,000 சம்பாதிக்கும் என்ஜினியர் நாகஜோதி என்பவர், ஷேர் ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அவர் பாதுகாப்பு வேண்டி சென்னை கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தார்.

சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்தவர் நாகஜோதி(21). என்ஜினியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியின் மகன் ரகு. ஷேர் ஆட்டோ டிரைவர். நாகஜோதியும், ரகுவும் காதலித்து வந்தனர். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த நாகஜோதி தனது பெற்றோர் எதிர்பபையும் மீறி ரகுவை திருமணம் செய்து கொண்டார்.

அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்திக்க தனது கணவருடன் வந்தார். திரிபாதியை சந்தித்த அவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நான் என்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.70,000 சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். எங்கள் பகுதியில் வசிக்கும் ரகு என்பவரை நான் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தேன். எங்கள் காதலை எனது பெற்றோர் ஏற்கவில்லை. எங்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர்.

இதனால் நான் மதில் சுவர், வேலி ஏறி தாண்டி குதித்து வீட்டை விட்டு ஓடி வந்து ரகுவை பதிவு திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் எனது குடும்பத்தினர் என்னை, எனது கணவரிடம் இருந்து பிரிக்க தேடி அலைகிறார்கள். எனது குடும்பத்தாரால் எனக்கும், எனது கணவருக்கும் ஆபத்து உள்ளது. எங்கள் திருமணத்தை அங்கீகரித்து, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நீங்களோ வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நீங்களும் கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். உங்கள் கணவரோ ஆட்டோ டிரைவராக உள்ளார். அப்படி இருக்கையில் உங்கள் மண வாழ்க்கை பொருத்தமானதாக இருக்குமா என்று கேட்டதற்கு, நாகஜோதி கூறியதாவது,

நிச்சயமாக நன்றாக இருக்கும். நான் என்ன தான் ரூ.70,000 சம்பாதித்தாலும், எனது கணவரின் வருமானத்தில் வாழ்க்கை நடத்துவதையே பெருமையாக நினைக்கிறேன் என்றார்.

English summary
A Chennai based engineer Nagajyothi, who earns Rs.70,000 per month, has fallen in love with an auto driver and married him against her parents wishes. She has given a petition to commissioner Tripathi seeking protection for her and her husband from her family members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X