For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு சலுகைகள் வேண்டி நெல்லை பல்கலை முன்பு 3வது நாளாக பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

நெல்லை: சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் (மூட்டா) சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் முன்பு இன்று 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் 500 சுயநிதி மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சுமார் 50,000 பேராசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த அரசு விதியும் பொருந்தாது எனவும், இதனால் மகப்பேறு விடுப்பு, பணி நியமனம் போன்றவற்றில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கும் அரசு சலுகைகள் வேண்டும், மேலும் சுயநிதி மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் (மூட்டா) சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் முன்பு 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த போராட்டத்தில் சுமார் 100 பேர் கொண்ட 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தலா 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. இன்று 3வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

English summary
Private college professors are on 72 hour hunger strike in front of M.S. University in Tirunelveli demanding government concessions for them and students of private and university affiliated colleges. The fast which started on november 21 has entered the third and final day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X