For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான செலவு ரூ.126.52 கோடி

Google Oneindia Tamil News

St George Fort
சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலுக்காக, மொத்தம் ரூ.126.52 கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கு ரூ. 126.52 கோடி செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்காளர் அட்டை விநியோகித்தல் உள்ளிட்ட இன்ன பிற பணிகளுக்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளில் தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்காலிக ஊழியர்களின் சம்பளம், படிகள், பயண செலவுகள், போன் கட்டணம், வாக்களிப்பு நிகழ்ச்சியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தல் ஆகியவற்றிற்கு அதிகளவில் பணம் செலவிடப்பட்டது.

தேர்தல் அலுவலர்களின் மதிப்பூதியம், தேர்தல் பார்வையாளர்கள் செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்கும் பணம் செலவு செய்யப்பட்டது. இந்த முறையில் சட்டசபை தேர்தலுக்காக மொத்தம் ரூ.126.52 கோடி செலவாகி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் பறக்கும் படை அமைத்தல், பூத் சீட்டுகள் வினியோகித்தல், வீடியோ கண்காணிப்புக் குழு மற்றும் கணக்கு மதிப்பீட்டுக் குழு அமைத்தல், அதிகளவில் மத்திய காவல் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தல், பிற மாநிலங்களின் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தல், முறையான செயல்முறை பயிற்சி வழங்குதல் போன்ற புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அனைத்து தொகுதியிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருத்தங்கள் செய்தல் ஆகிய பணிகளும் நடந்தன. இந்த நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கான சம்பளம், எழுதுப் பொருள் செலவு, ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுக்கான சம்பளம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் கணினி மயமாக்கும் பணிக்கு ரூ.38,50,40,000 செலவிடப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத தொகையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.

மேலும் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்களுக்கான செலவு, பூத் அமைத்தல், மின் விளக்குகள் மற்றும் எழுதுப் பொருட்களுக்கான செலவு, ஓட்டுப்பதிவு எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கான ஊதியம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய துணை ராணுவப் படை, ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கான ஊதியம், தேர்தல் பணிகளுக்கான போக்குவரத்து செலவு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.78,61,48,000 செலவிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தொலைப்பேசி கட்டணங்கள், எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டு எண்ணிக்கையை கண்காணித்தல், ஊழியர்கள் பயண செலவுகள், இதர செலவுகள் என்று ரூ.9,40,77,000 செலவிடப்பட்டுள்ளது. இந்த வகையி்ல் சட்டசபைத் தேர்தலுக்காக மொத்தம் ரூ.126.52 கோடி செலவாகியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Rs.126.52 cr was spent for conducting the TN assembly polls 2011, said sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X