For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தின் சக்தி வாய்ந்த ஆசிய தொழிலதிபராக லட்சுமி மிட்டல் தேர்வு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் 2011 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த ஆசியத் தொழிலதிபர் பட்டியலில் இந்தியரான லட்சுமி மிட்டல் பெயர் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 93 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

இங்கிலாந்தில் வசிக்கும் சக்திவாய்ந்த ஆசிய தொழிலதிபர்களாக உள்ளவர்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை நடத்திய இந்த ஆண்டுக்கான சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலை இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக் வெளியிட்டார்.

அந்த பட்டியலில் இந்திய வம்சாவளி‌யை சேர்ந்தவரும், வாழும் இரும்பு மனிதருமான லட்சுமி மிட்டல், முதல் இடத்தை பிடித்துள்ளார். 61 வயதான மிட்டல், ஆர்ச்லர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் போர்டு ஆஃப் டைரக்டர்களின் தலைவராகவும் உள்ளார். சொந்தமாக விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வரும் மிட்டலின் சொத்துமதிப்பு 93 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

English summary
Lakshmi Mittal, the NRI steel tycoon with a fortune estimated at £15.5 billion, is the most powerful Asian in Britain, according to a new list of eminent Asians in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X