For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை உள்பட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடாதா?- கேரள அமைச்சர் உருக்கம்

Google Oneindia Tamil News

Kerala Minister PJ Joseph
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணை உடைந்துவிடுமோ என்ற பயத்தில் இரவில் தூக்கம் வருவதில்லை. இப்போது செழிப்பாக இருக்கும் மதுரை உள்பட 5 மாவட்டங்கள் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் பாலைவனம் ஆகிவிடாதா என்று கேரள பாசனத்துறை அமைச்சர் ஜோசப் உருக்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில், "கடந்த ஜூலை 26ம் தேதிக்கு பிறகு இடுக்கி மாவட்டத்தில் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் அஸ்திவாரம் பலம் இழந்துள்ளது. எனவே தான் புதிய அணை கட்ட வேண்டும் என்கிறோம்.

இந்த அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரால் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், தேனி உள்பட 5 மாவட்டங்களில் செழிப்பாக விவசாயம் நடைபெற்று வருகிறது. அணை உடைந்தால் இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பாலைவனம் ஆகிவிடாதா?

அணை உடைந்தால் கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும் நஷ்டம். புதிய அணை கட்டினால் தண்ணீர் கிடைக்காது என்று கவலைப்பட வேண்டாம். சிறுவாணி அணையிலிருந்து இப்போதும் எந்த தடையும் இல்லாமல் தண்ணீர் தருகிறோமே. அணை பலகீனமாக இருப்பதால் இடுக்கி உள்பட 3 மாவட்ட மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். என்னால் கூட இரவில் தூங்க முடியவில்லை," என்றார்.

English summary
Kerala's water resources minister PJ Joseph has told whether Mullaiperiyar dam collapsed Tamil Nadu will also get affected. "I am not able to sleep in night because of the fear that dam may collapse", he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X