For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு வன்முறையைத் தூண்டுகிறார் ஹஸாரே! - திக்விஜய் சிங்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: காநிதயவதி என்று சொல்லிக் கொள்ளும் அன்னா ஹசாரே வன்முறையாத் தூண்டுவதாவும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி சட்டத்தை மீறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில், "காந்தியவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் அன்னா ஹசாரே, மத்திய அமைச்சர் சரத் பவார் தாக்கப்பட்டார் என்று தெரிந்ததும், ஒரேயொரு அரை தானா என்று கேட்டுள்ளார்? இது போன்ற பேச்சுகளால் அன்னா வன்முறையைத் தூண்டுகிறார்.

அனனா குழுவின் முக்கிய உறுப்பினரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி சட்டத்தை மீறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் சாதகமான தீர்ப்பு பெற நீதிபதிகளை அமர்த்துவது குறித்து பேரம் பேசுகிறார்.

முன்னாள் இந்திய வருவாய்த்துறை அதிகாரியான கேஜ்ரிவால் தனக்கு கிடைக்கும் பல கோடி நன்கொடையை என்ன செய்கிறாரே என்றே தெரியவில்லை.

விலை உயர்வு வன்முறையைத் தூண்டும் என்று பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியதற்கும் பவாருக்கு ஒரு அறைதான் விழுந்ததா என்று அன்னா கேட்டதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? அன்னாவின் இந்த பேச்சு ஒரு காந்தியவாதியின் பேச்சு போன்று இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Congress general secretary Digvijay Singh has accused Gandian Anna Hazare of provoking violence, former IPS officer Kiran Bedi of urging the people to break law and former law minister Shanti Bhushan of promising to fix judges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X