For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்நிய நேரடி முதலீட்டினால் வேலை வாய்ப்பு பெருகும் – மத்திய அரசு பிரச்சாரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

FDI
டெல்லி: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க எதிர்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் இவற்றைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் எக்கச்சக்க நன்மைகள் ஏற்படும் என்று விளம்பரப்படுத்தி வருகிறது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் வரை அனுமதிக்கும் கடந்த நவம்பர் 24 ம் தேதி அறிவிப்பை மத்திய அமைச்சரவை அறிவித்தது.

இந்த அறிவிப்பிறகு பாஜாக, உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஆளும் கூட்டணி அரசில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டினை அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு லாபமும், வேலை வாய்ப்பும் பெருகும் என்று மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் முழு பக்கம் விளம்பரம் கொடுத்துள்ளது.

வியாபாரிகளுக்கு பயன்

அந்நிய நேரடி முதலீடு கடைகளால் சிறுவணிகர்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பது அச்சம். ஆனால் அரசு கொடுத்துள்ள விளம்பரத்தில் சிறு வணிகர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையில் மொத்தமாக இந்த வெளிநாட்டு கடைகளில் இருந்து மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தாய்லாந்து, சீனா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சில்லரை வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

அந்நிய நேரடி முதலீட்டு கடைகளால் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும் என்பது அச்சம். ஆனால் அரசு கொடுத்துள்ள விளம்பரத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதினால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குப் பயன்

விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது அச்சம். ஆனால் விவசாயிகள் தங்கள் உற்பத்திப்பொருளுக்கான முழு பலனையும் பெருவார்கள் என்று அரசின் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Under attack from the Opposition and UPA ally Trinamool Congress on allowing global retail chains in the Indian market, the government on Sunday launched a campaign to sell advantages of FDI in multi-brand retail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X