For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணிண் அக்கெளண்டுக்கு வந்த ரூ. 29 கோடி- 'திருபட்டப்பட்ட' எல்ஐசியின் பணமா?

By Chakra
Google Oneindia Tamil News

காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள மோடிநகர் பகுதி பஞ்சாப் நேசனல் பேங்க் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெண்ணின் அக்கெளண்டுக்கு ரூ. 29 கோடி வந்ததையடுத்து அந்தக் கணக்கை வங்கியின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் உள்ள பாரத் குக்கிங் கோல் லிமிட்டட் என்ற பொதுத் துறை நிறுவனத்தின் ஸ்டேட் வங்கியின் கணக்கிலிருந்து இந்தப் பணம் அந்தப் பெண்ணின் கணக்குக்கு வந்துள்ளது.

சமீபத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 68 செக்குகள் ஒரு தபால் நிலையத்திலிருந்து திருடப்பட்டன. இதில் ரூ. 70 மதிப்புள்ள ஒரு செக் மோடிநகர் பஞ்சாப் நேசனல் பேங்கில் ஒரு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு, அந்தப் பணமும் எடுக்கப்பட்டுவிட்டது.

இந்த மோசடி குறித்து பஞ்சாப் நேசனஸ் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த ரூ. 29 கோடி பணம் பெண்ணின் அக்கெளண்டுக்கு வந்துள்ளது.

இதுவும் எல்ஐசிக்கு சொந்தமான திருடப்பட்ட காசோலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

English summary
The vigilance unit of a nationalised bank here has frozen a woman's bank account after Rs 29.25 crore was transferred to it, bank officials said today. The money was transfered to the woman's Punjab National Bank account in Modinagar branch from Bharat Coking Coal Limited's State Bank of India account in Dhanbad branch in Jharkhand, they said. The unit is probing any possible connection between the transfer and withdrawal of Rs 70 lakh from the Modinagar branch following stealing of 68 LIC cheques from a post office in August. The officials, however, refused to disclose the name of the account holder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X