For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

Maveerer day celebrated in Karur
கரூர்: தமிழர் களத்தின் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது.

கரூரில் தமிழர் களம் அமைப்பின் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சீவானந்தம் தலைமை தாங்கினார். தமிழ் உணர்வாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய பலரும் கூறியதாவது,

இந்த மாவீரர் நாளில் தமிழினம் இனப்படுகொலையால் கொல்லப்பட்ட துயரத்தை எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது. ஈழம் பிறக்க தமிழர்கள் ஒரே இனமாய் ஒன்றிணைந்து களம் கண்டால்தான் தீர்வு கான முடியும். இந்தியாவும், திராவிடமும் தமிழர்களுக்கு எதிரிகள் தான். தமிழக அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணும் தருணம் இதுவே, என்றனர்.

அவர்களை தொடர்ந்து வழக்குரைஞர் ராஜேந்திரன், அரசு, செந்தில், சதாசிவம், குறழகன் உள்ளிட்ட பலரும் தங்களது மாவீரர் சிந்தனைகளை எடுத்துரைத்தனர். முடிவில் தமிழர் களம் ஊடகப் பிரிவு முருகானந்தம் நன்றி தெரிவித்தார்.

English summary
Maveerer day was celebrated in Karur. Tamil Kalam orgainsation oraganised the celebration
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X