For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை போகும் தமிழக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது- 3வது நாளாக எல்லையில் பதட்டம்!

Google Oneindia Tamil News

Sabarimala
தேனி: சபரிமலைக்குப் போகும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தேனி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதிகளிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரள எல்லைப் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் போக்குவரத்து முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. அதேசமயம், நெல்லை, கோவை, கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலை காணப்படுகிறது.

நிலக்கல் மற்றும் குமுளியில் தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது, குமுளியில் தமிழர்கள் வைத்திருந்த கடைகள் சூறையாடப்பட்டது உள்ளிட்ட காரணத்தால் தேனி மாவட்டம் - கேரள எல்லைப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுததப்பட்டது. குமுளி வழியாகவும் குமுளியிலிருந்தும் ஒரு வாகனமும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல கேரளாவுக்கும் ஒரு வாகனமும் போகவில்லை.

கேரளாக்காரர்கள் நடத்திய வன்முறைப் போராட்டத்திற்குப் பதிலடியாக கம்பத்தில் கேரளாக்காரர்கள் நடத்திய கடைகள் சூறையாடப்பட்டன. லாரி, வேன், திராட்சைத் தோட்டம் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழகத்திலும் பல பகுதிகளில் கேரளாக்காரர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது.

குமுளியிலும், தமிழகத்தின் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளிலும் போலீஸார் 144 தடை விதித்துள்ளனர். இதனால் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து பதட்ட நிலை நிலவுகிறது. கடந்த 3 நாட்களாக தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து முடங்கிக் கிடக்கிறது.

காய்கறிகள் உள்ளிட்ட எந்தப் பொருளும் கேரளாவுக்குப் போகவில்லை. அதேபோல கேரளாவிலிருந்து எந்த வாகனமும் குமுளியிலிருந்து தமிழகத்திற்குள் வரவில்லை.

கம்பத்தில் 3வது நாளாக இன்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தமிழக வாகனங்களுக்கு கேரளாவில் பாதுகாப்பு இல்லை, தமிழர்களைத் தாக்குகின்றனர். பாதுகாப்பு கிடைக்கும் வரை கடைகளைத் திறக்க மாட்டோம் என்று கம்பம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கேரளாக்காரர்களின் போராட்டத்தால் கம்பம் மக்கள்தான் அதிகம் கொதித்துப் போயுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல கூடலூரிலும் பதட்ட நிலை நீடிக்கிறது. அசம்பாவித சம்பவங்கள், போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற போதிலும் பதட்டமான நிலை காணப்படுகிறது.

நெல்லை செங்கோட்டையில்...

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பாதையைத்தான் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் பாதையில் தற்போது பிரச்சினை இல்லை. இங்குள்ள எல்லைப் பகுதியில் வழக்கம் போல வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது.

தேனி பகுதியில் பிரச்சினை வெடித்தைதத் தொடர்ந்து பெருமளவிலான ஐயப்ப பக்தர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த ஆரம்பித்ததால் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. தற்போது அது குறைந்துள்ளதாம்.

சபரிமலைப் பயணத்தை ஒத்திவைக்கும் பக்தர்கள்

கேரளாவில் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுவதாலும், தாக்கப்படுவதாலும் பல ஐயப்ப பக்தர்கள் தங்களது சபரிமலை பயணத்தையே ஒத்திவைத்து வருவதாக கூறப்படுகிறது. பலர் விரதத்தையே முடித்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சபரிமலைக்கு் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாம்.

கோவையிலும் அமைதி

கோவை- கேரளா எல்லைப் பகுதியான வாலையாறில் அமைதி நிலவுகிறது. இந் வழியாக வாகனப் போக்குவரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும் பொருள் போக்குவரத்தும் இயல்பாக காணப்படுகிறது.

கேரளாவிலிருந்து வாகனங்கள் வழக்கம் போல வருகின்றன. தமிழகத்திலிருந்து வாகனங்கள் வழக்கம் போல போகின்றன.

கன்னியாகுமரி

கேரளாவின் ஜெராக்ஸ் போலக் காணப்படும் கன்னியாகுமரியிலும் பிரச்சினை இல்லை. இங்கு இரு தரப்பு மக்களும் சகோதரர்கள் போல பழகி வருவதாலும், இரு தரப்பு கலாச்சாரமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருப்பதாலும் எந்தப் பிரச்சினையையும் இங்கு காண முடியவில்லை.

ஐயப்ப பக்தர்கள் பாதிப்பு

முல்லைப் பெரியாறு பிரச்சினையை கேரளாக்காரர்கள் பெரிதாக்கி வன்முறையில் ஈடுபட்டதால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையால், தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்கிக் கிடக்கின்றன. பலர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு அந்தந்த ஊர் மக்கள் பலர் அன்னதானம் செய்து உதவி வருகின்றனர்.

மதுபானக்கடைகள் அடைப்பு

அசம்பாவிதங்களை தடுப்பதற்காக தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சின்னமனூர், கம்பம், க.புதுப்பட்டி, கூடலூர், காமயகவுண்டன்பட்டி, ஓடைப் பட்டி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, காமாட்சிபுரம், சுருளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 26 அரசு மதுபானக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டு உள்ளன.

கேரள அரசு பஸ், லாரி கண்ணாடி உடைப்பு

இதற்கிடையே, நேற்றிரவு குமுளியிலிருந்து தமிழகத்துக்கு தமிழகத்தை சேர்ந்த ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் கேரளத்தை சேர்ந்த சிலரை டிரைவர் ஏற்றி வந்தார். லாரி கம்பம் நகருக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த மக்கள் லாரியில் கேரளத்தினரை ஏற்றிவரக்கூடாது என்று எச்சரித்தனர்.

இருப்பினும் லாரி டிரைவர் அவர்களை இறக்கிவிடாமல் தொடர்ந்து லாரியை ஓட்ட முயற்சித்தார். உடனடியாக பொதுமக்கள் லாரியை மடக்கிப் பிடித்து கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள்.

அதேபோல் குமுளியில் இருந்து கூடலூருக்கு கேரள அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சின் பதிவு எண்ணுக்கு மேல் தமிழ்நாடு பதிவு எண்ணை ஒட்டிக் கொண்டு வந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த சிலர் அந்த பஸ்சை நிறுத்தி பஸ்சில் இருந்த கேரள மக்களை இறக்கிவிடுமாறு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, திடீரென கேரள அரசு பஸ்சின் கண்ணாடிகளை சிலர் அடித்து நொறுக்கினா

English summary
There is a drastic reduction in Iyappa devotees travelling to Sabarimalai due to the tension prevails in Kerala. Meanwhile vehicle traffic is totally stopped in Theni district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X