For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி.. ப.சிதம்பரம்..: சு.சாமியின் கோரிக்கையை ஏற்றது சிபிஐ நீதிமன்றம்

By Chakra
Google Oneindia Tamil News

P Chidambaram and Subramanian Swamy
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க முன்னாள் நிதித்துறை இணைச் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லார், சிபிஐ இணை இயக்குனர் அஸ்வதி ஆகியோரை சாட்சியாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரமும் கூட்டுச் சதி செய்துள்ளார். அவரும் முன்னாள் அமைச்சர் ராசாவும் சேர்ந்துதான் விலை நிர்ணயம் செய்துள்ளனர். எனவே ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது சாமியின் கோரிக்கையாகும்.

இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் தொடர்பான கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சாமி கோரியிருந்தார். அதை டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ, சாமியிடம் அளித்தது.

மேலும் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க முன்னாள் நிதித்துறை இணைச் செயலாளர் சிந்துஸ்ரீ குல்லார் (இவர் இப்போது விளையாட்டுத்துறை செயலாளராக உள்ளார்), சிபிஐ இணை இயக்குனர் அஸ்வதி ஆகியோரையும் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சாமி கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது. ஆனால், வரும் 17ம் தேதி சுப்பிரமணிய சாமி முதலில் சாட்சிக் கூண்டில் ஏறி குல்லார் மற்றும் அஸ்வதியிடம் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு விளக்கம் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றால் மட்டுமே, குல்லார் மற்றும் அஸ்வதியை இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்படுவர்.

English summary
A trial court in Delhi on Thursday accepted Janata Party president Subramanian Swamy's plea to examine two witnesses in the 2G scam case. Swamy is demanding that Union Home Minister P Chidambaram be made a co-accused in the 2G scam case. The two witnesses swamy wants be examined are Sports Secretary Sindhushree Khullar, who was then joint secretary finance, and Joint Director, CBI, HC Awasthi. Swami wants court to examine two witness in this case. Court accepted it but with a condition that Swami will be examined first on December 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X