For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே!

By Chakra
Google Oneindia Tamil News

Rajapakse
லண்டன்: கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஆற்றிய உரையை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொழில்ரீதியான பிரச்சார (லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பெல் பாட்டின்ஜர் (Bell Pottinger) என்ற நிறுவனம் தான் அதை எழுதிக் கொடுத்துள்ளது. ராஜபக்சே ஐ.நா.வில் வாசித்த அந்த உரையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர் தொடர்பாகவே உள்ளது. அது, ஒரு அரசாங்கம் தீவிரவாதிகளுடன் நடத்தும் போர் தொடர்பாக இல்லை. எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தையும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஜெனீவா ஒப்பந்ததையும் திருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த உரையை பெல் பாட்டிஞ்ஜர் என்ற நிறுவனத்தை வைத்து ராஜபக்சே தயாரித்ததாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்தின் த இன்டிபெண்டன்ட் நாளிதழின் நிருபரிடம் கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ. 3 கோடியை இலங்கை அரசு தந்துள்ளது. இங்கிலாந்து. ஐ.நா., ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளை இலங்கைக்கு ஆதரவாகத் திருப்ப இந்த நிறுவனம் மூலம் இலங்கை அரசு முயன்றுள்ளதாகவும் இன்டிபெண்டன்ட் கூறியுள்ளது.

ஆனால், இந்தத் தகவலை இலங்கை அரசு வழக்கம் போல் மறுத்துள்ளது.

இந்தோனேஷியாவில் ராஜபக்சே:

இந் நிலையில் அதிபர் ராஜபக்சே இன்று இந்தோனேஷியாவிலுள்ள பாலித் தீவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்தோனேஷியா அரசு ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக அரங்கம் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 54 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 15 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இலங்கையில் ரஷ்ய ஆயுதப் பராமரிப்பு நிலையங்கள்:

இதற்கிடையே இலங்கையில் ஆயுத பராமரிப்பு நிலையங்களை அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வாய்ஸ் ஆப் ரஷ்யா வானொலி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ரஷ்ஸ்யா இலங்கைக்கு எம்.ஐ ரக 4 ஹெலிகாப்டர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஹெலிகாப்டர்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

English summary
Sri Lanka has strongly denounced a report in a UK newspaper which said a leading lobbying company wrote a speech on behalf of the president. In a report on Tuesday, the Independent quoted a Bell Pottinger company spokesman as saying it wrote a speech the president gave to the UN in 2010.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X