For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளிக்கு வீரர்களை கொண்டு செல்ல அமெரிக்காவின் புதிய விண்கலம் SpaceX !!

By Chakra
Google Oneindia Tamil News

Dragon ISS
ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா தனது ஷட்டில் ரக விண்கலங்கள் உபயோகிப்பதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக SpaceX ரக விண்கலங்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

கிட்டதட்ட 30 ஆண்டுகள் 135 முறை ஏவப்பட்ட ஸ்பெஸ் ஷட்டில் ரக விண்கலங்கள் ஏராளமான விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்றது. ஆனால், இதற்கு பதில் மிக நவீனமான ஷட்டில்களை நாஸா உருவாக்கி வருகிறது. அதுவரை வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் செல்லவும் பூமிக்கு திரும்பச் செய்யலும் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல்களையே அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இதற்கிடையே, விண்வெளிக்கு வீரர்களையும் சுற்றுலா பயணிகளையும் அழைத்துச் செல்லும் விண்கலங்களை உருவாக்குவதில் அமெரிக்காவில் பல விண்துறை நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் ரக கேப்சூலுக்கு நாஸா அனுமதி தந்துள்ளது. இந்த கேப்சூல் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இதில் பயணிக்கும் விஞ்ஞானிகள் வானில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவிட்டு, இந்த கேப்சூலிலேயே பூமிக்குத் திரும்புவர்.

ஷட்டில் ரக விண்கலம் விமானத்தைப் போல பூமியில் தரையிறங்கும். ஆனால், இந்த கேப்சூல் பாராசூட் மூலம் பூமியில் தரையிறங்கும்.

ரஷ்யா தான் (சோவியத் யூனியன்) ஆரம்பத்திலிருந்தே கேப்சூல்களை பயன்படுத்தி வந்த நாடாகும். அமெரிக்கா இதை அதிகம் உபயோகித்ததில்லை. விண்வெளிப் பயனத்துக்கு ஷட்டில்களையே அதிகமாக பயன்படுத்தி வந்தது. இப்போது நெடுங்காலத்துக்குப் பிறகு அமெரிக்கா கேப்சூலை பயன்படுத்தவுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தனியார் விண்கலத்தை வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும். இதில் வீரர்கள் யாரும் செல்ல மாட்டார்கள். சரக்குகளை ஏற்றிச் செல்லும் இந்த கேப்சூல், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அதை கொண்டு செல்லும்.

அங்குள்ள விஞ்ஞானிகள் சரக்குகளை இறக்கிய பின், இந்த கேப்சூல் பூமிக்குத் திரும்பும். பசிபிக் கடலில் பாராசூட் மூலம் இந்தக் கலம் தரையிறங்கும்.

இந்த விண்கலத்தை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் பே பால் நிறுவனரான எலோன் முஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A private California company will attempt the first-ever commercial cargo run to the International Space Station in February. NASA announced the news one year and one day after Space Exploration Technologies Corp, or SpaceX, became the first private business to launch a capsule into orbit and return it safely to Earth. On February 7, SpaceX will attempt another orbital flight from Cape Canaveral Air Force Station. This time, the unmanned Dragon capsule will fly to the space station and dock with a load of supplies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X