For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு காய்கறி தராததால், கேரளாவில் தக்காளி ரூ.200, கத்தரிக்காய் ரூ.160

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைபட்டுள்ளதால் கேரளத்தில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தடை நீட்டிக்கும் பட்சத்தில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவின் காய்கறித் தேவையை நிறைவேற்றுவது தமிழ்நாடுதான். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து நாளொன்றுக்கு 500 டன் காய்கறிகள் வரை கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும். தவிர கோவை, நாகர்கோவில், உள்ளிட்ட மாவட்டங்களின் காய்கறிச்சந்தைகளில் இருந்தும் ஏராளமான காய்கறிகள் லாரி மற்றும் டெம்போ வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வியாபாரிகள் வருகை பாதிப்பு

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழகம்- கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டதை அடுத்து வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வியாபாரிகளும் கேரளாவிற்கு காய்கறிகளை அனுப்பப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதனால் கேரளா சந்தைகளில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

தக்காளி கிலோ 200 ரூபாய்

அங்கு ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு முருங்கை 60 ரூபாயாகவும் ஒரு கட்டு கொத்தமல்லி 20 ரூபாய், கருவேப்பிலை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Mullai Periyar issue Vegetable price hike in Kerala. One kilogram tomato 200 rupees, One kilogram brinjal 160 rupees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X