For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி ஊழலில் சிதம்பரத்திற்கும் பங்குண்டு - சுப்பிரமணிய சாமி சாட்சியம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Subramaniam swamy
டெல்லி: 2 ஜி விவகாரத்தில் ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயம் செய்ததில் அப்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அ. ராசா உடன் சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். போது இதனை தெரிவித்தார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வரும் சுப்பிரமணியசாமி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான போது இது தொடர்பாக, சில ஆதாரங்களையும் அவர் நீதிபதி ஓ.பி. சைனியிடம் தாக்கல் செய்தார்.

சிதம்பரத்திற்கும் பங்குண்டு

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டதில், தொலை தொடர்புத் துறை மற்றும் நிதி அமைச்சகத்திற்கு பங்கு இருந்ததாக, மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததாகவும் சுப்பிரமணியன் சுவாமி நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார். எனவே இந்த ஊழல் விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை மட்டும் குற்றவாளியாக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றும், சுப்பிரமணிய சாமி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

English summary
Presenting his case against Union Home Minister P Chidambaram in a trial court in Delhi, Janata Party president Subramanian Swamy today said the minister should be made an accused in the 2G scam case as he had jointly taken the decision on spectrum prices with former Telecom Minister A Raja, the alleged mastermind of the swindle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X