For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம், பதக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

Paddy
சென்னை: தமிழகத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பப் படி அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால் வேளாண் உற்பத்தியைப் பெருக்க, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.

தற்பொழுது நவீன தொழில் நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பரிசு முதல்வர் அவர்களால் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்த பட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, குறைந்தபட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கையினால் விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CM Jayalalithaa has ordered the officials to give Rs.5 lakh and a medal worth Rs.3,500 to a farmer who grows more paddy. This prize will be given every year. This competition will be held in all parts of TN except Chennai and Nilgiris districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X