For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போலியோ பரவும் அபாயம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போலியோ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அதை தடு்கக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பாகிஸ்தானில் 173 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாக இந்தியாவில் ஒரே ஒருவருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போலியோ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதா என்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய கூறியதாவது,

பாகிஸ்தான் போலியோ வைரஸை பரப்பி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. இந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட போலியோ வைரஸ் தற்போது பாகிஸ்தானில் பரவி வரும் வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும். பாகிஸ்தானையொட்டியுள்ள அம்ரித்சர், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் உள்ள சுகாதார மையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய எல்லைக்குள் வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 134 பேரை போலியோ தாக்கியது. இந்தியாவில் 41 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. போலியோ இல்லா இந்தியா என்ற இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து போலியோ வைரஸை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

English summary
Minister of State for Health Sudip Bandyopadhyay told that India faces polio threat from Pakistan. WHO has confirmed that Pakistan is exporting polio virus. In 2011 173 polio cases have been found in Pakistan while 1 case in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X