For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா-ஆபரேஷன் மூலம் அகற்றம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: 75 வயதான பெண்மணி ஒருவரின் வயிற்றில் 25 வருடங்கள் வசித்து வந்த பேனாவை ஆபரேசன் மூலம் அகற்றியுள்ளனர் மருத்துவர்கள். இந்த நிகழ்வை மருத்துவ உலகினர் அதிசயமாக கூறி வியக்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண்மணி கடந்த 25 ஆண்டுகளாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 1986 ஆம் ஆண்டு டான்சில் பிரச்சினைக்காக தொண்டையில் ஆபரேசன் செய்தது தவிர அவர் வேறு எதற்காகவும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வயிற்று வலி அதிகரிக்கவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.

அப்போது அவரது வயிற்றில் ஏதோ கம்பி போன்ற பொருள் இருப்பது தெரிய வந்தது. உடனே டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்தப் பொருளை வெளியே எடுத்தனர். அப்போதுதான் அது பேனா என்று தெரியவந்தது.

25 ஆண்டுகளாக இருந்த பேனா

25 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த அந்தப் பேனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேனா எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று அந்த பெண்மணிக்கு நினைவு இல்லை. இருந்தாலும் வயிற்றில் இருந்த ஒரு பாரம் குறைந்து, உயிர் பிழைத்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் 76 வயதான அந்த பெண்மணி.

English summary
A British pensioner who had a pen removed from her stomach has left the medical world amazed after it worked more than a quarter of a century later. The 76-year-old, who has not been named, inadvertently swallowed the felt-tip in early 1986 while she was attempting to check her tonsils. As she held down her tongue it fell down her throat and she rushed to hospital to have it removed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X