For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி ஆதரவு போலீஸ் அதிகாரிகள் யார்?- பட்டியலில் பலர் மாயம்- ஜெ. அதிருப்தி!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சசிகலா ஆதரவுடன் முக்கியப் பதவிகளுக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் யார், ஏற்கனவே இருப்பவர்கள் யார் என்ற முழுமையான பட்டியல் தனக்குத் தரப்படாததால் முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கோட்டையிலிருந்து வரும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சசிகலாவை விரட்டிய கையோடு தற்போது அவரின் நிழல்களைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இங்கென்றில்லை, அங்கென்றில்லை, எங்கெங்கு காணினும் சசிகலாவின் ஆட்களாக இருப்பதால் அவர் திக்குமுக்காடிப் போயிருப்பதாக தெரிகிறது.

முதல் கட்டமாக தனது வீட்டு பாதுகாப்பு அதிகாரிகளை மாற்றிய ஜெயலலிதா தற்போது மாநில அளவில் காவல்துறையில் உள்ள சசிகலா ஆதரவு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அத்தனை மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நிறையப் பேர் உள்ளனராம். இவர்களால் பலவித குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு, ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக இவர்களை முக்கியப் பொறுப்புகளிலிருந்து மாற்றி டம்மி போஸ்டுகளில் நியமிக்க ஜெயலலிதா தீர்மானித்துள்ளார்.

இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு டிஜிபி ராமானுஜத்தை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தனக்குத் தருமாறு அவர் கேட்டுள்ளார்.

இதையடுத்து டிஜிபி அலுவலகத்திற்குத் திரும்பிய ராமானுஜம், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி தாமரைக்கண்ணன் ஆகியோரை வரவழைத்து இந்தப் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் ஒரு பட்டியலைத் தயாரித்து அதை முதல்வரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் பட்டியலில் ஜெயலலிதாவுக்குத் திருப்தி இல்லையாம். இதில் பலரது பெயர்கள் மிஸ் ஆகிறதே என்று அவர் கூறியுள்ளார். பக்கவாக விசாரித்து முழுமையான பட்டியலுடன் வருமாறு ராமானுஜத்திடம் அவர் கூறியுள்ளாராம்.

இதையடுத்து புதிய பட்டியலைத் தயாரிக்கும் பணியில் டிஜிபி அலுவலகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாம். சசிகலா ஆதரவு அதிகாரிகள் சிலர் மறைமுகமாக செயல்பட்டு வருவதால், முழுமையான பட்டியலைத் தயாரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் நம்பகமான காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் மறைந்திருக்கும் சசிகலா ஆதரவு அதிகாரிகளைக் கண்டுபிடித்து பெயரை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஹிட் லிஸ்ட்டில் இடம் பெறும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது அவர்களில் யார் மீதாவது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
CM Jayalalitha has ordered the DGP to prepare a pro Sasikala police officers list immediately. She will take action against them after the complete list is ready.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X