For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தாண்டில் மன்னார்குடி- திருச்சி புதிய பயணிகள் ரயில் சேவை துவங்கியது

Google Oneindia Tamil News

திருச்சி: மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு புதிய பயணிகள் ரயில் சேவை நேற்று முதல் துவங்கியது.

மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று புதிய ரயில் சேவையை புத்தாண்டு முதல் துவங்குவதாக ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அறிவித்தார். அதன்படி நேற்று (ஜனவரி 1) முதல் மன்னார்குடியில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் சேவை துவங்கியது.

இந்த ரயில் மன்னார்குடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 7.50 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.40க்கும் சென்றடையும்.

திருச்சியில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.45 மணிக்கு வந்தடையும். மன்னார்குடிக்கு இரவு 8.00 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெறும் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது.

English summary
Passenger train service from Mannargudi-Trichy has started on the new year. The train will leave Mannargudi at 6.30 am and reach Trichy at 9.40 am.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X