For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ரி பெய்டு மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது மின்வாரியம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Tneb
சென்னை: தமிழ்நாடு மிசாரவாரியம் சார்பில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோரிடம் மின்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணங்களை வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் மின்சாரவாரிய அலுவலங்களில் செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இப்போது கூடுதலாக ஒரு வருடத்துக்கான மின்கட்டணத்தை நுகர்வோர்கள் முன்கூட்டிய செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சாரவாரியம் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் இந்த திட்டம் பற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,

ப்ரி பெய்டு திட்டம்

முன் கூட்டியே கட்டணம் செலுத்தும் இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக கடந்த வருடங்களில் கட்டிய மின்கட்டனங்களை கணக்கில் கொண்டு ஒரு ஆண்டுக்கான தொகையை கணக்கிட்டு வசூலிக்கப்படும், இப்படி பெறப்படும் தொகைக்கு ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் வட்டியும் கணக்கிடப்பட்டு முன்கூட்டியே கட்டப்பட்ட தொகையுடன் சேர்க்கப்படும், அந்த தொகையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோரின் மின்கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.

காலவிரையம் குறையும்

இதனால், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்த செல்லும் காலவிரையம் குறைக்கப்படும். மேலும், தவிர சரியான நேரத்தில் மின் கட்டணம் கட்டாத்தால் மின்னிணைப்பு துண்டிக்கப்படுவது, அபராதம் விதிக்கபடுவது போன்ற தேவையற்ற சிரமங்கள் தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

English summary
TNEB will soon introduce prepaid bill payment system for the sake of consumers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X