For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிணாமுல் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி உடையுமா?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கூட்டணியி்ல் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

மேற்குவங்காளத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை நீக்கிவிட்டு, ஆட்சியை பிடித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பெனர்ஜி. அதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் தற்போது 2 கட்சிகள் இடையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட தொடங்கியுள்ளது.

இதன் முன்னோடியாக மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதா, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, பெட்ரோல் விலையேற்றம் உட்பட பலவற்றில் மமதாவுக்கு மாற்று கருத்து தெரிவித்து வருகிறார்.

மேலும் மேற்குவங்காளத்தில் உள்ள இந்திராபவனின் பெயரை மாற்ற மாநில அரசு தீர்மானித்துள்ளதால், காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் மீதான அதிருப்தியை தெரிவிக்கும் வகையி்ல், இன்று திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தரப்பில் கண்டன பேரணி நடத்தி உள்ளனர். இதற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கலந்து கொள்ள உள்ள மமதா அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக மமதா பெனர்ஜி பேட்டி ஒன்றில் கூறியதாவது,

இடதுசாரிகளுடன் இணைந்து செயலாற்ற விரும்பினால் காங்கிரஸ் பிரிந்து செல்லலாம். நாங்கள் தனியாக கூட செயல்படுவோம், என்றார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட மம்தா பானர்ஜி விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகவே காங்கிரஸை கழற்றிவிடும் திட்டத்துடன் மத்திய அரசை எதிர்த்து வருகிறார் என்கிறார்கள்.

English summary
The Trinamool Youth Congress has made a tension between Congress and the Trinamool. The alliance between 2 parties may break due to the speech of West Bengal CM Mamta Banerjee that, her alliance partner, who she accuses of working with the CPI-M against her, was free to leave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X