For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மளிகைப் பொருள்கள் மொத்த விலை குறைந்தது... சில்லறை விலை 'அப்படியே' உள்ளது!!

By Shankar
Google Oneindia Tamil News

Food
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. விளைச்சல் வேறு நாடு முழுவதும் நன்றாக உள்ளது. எனவே மளிகை பொருள்கள் விலை குறைந்திருக்கும் என நம்பிக்கையோடு கடைக்குச் செல்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருக்கிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி, மளிகை பொருட்கள், கரும்பு, மஞ்சள் குலைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 100 லாரிகளில் கரும்பு வந்து இறங்குகிறது. இது இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொங்கலுக்கு முக்கியமான மஞ்சள் கொத்து பொன்னேரி, படப்பை பகுதிகளில் இருந்து அதிகம் வந்து கொண்டிருக்கிறது. அரியலூர், புதுச்சேரி, பெங்களூர் பகுதிகளில் இருந்து வருகிறது பூசணிக்காய். இதே போல் மளிகை பொருட்களின் விளைச்சலும் அதிகமாக இருப்பதால் மொத்தவிலை மார்க்கெட்டில் வேகமாக குறைந்து வருகிறது.

1 கிலோ மஞ்சள் ரூ. 140-ல் இருந்து 90க்கு விலை குறைந்துள்ளது. ஈரோடு மஞ்சள் கிலோ ரூ. 60-க்கு கிடைக்கிறது. பச்சை பருப்பு கிலோ ரூ. 65-க்கும், உளுந்தம் பருப்பு கிலோ ரு. 65-ல் இருந்து 58-க்கும் கிடைக்கிறது. பாசிப்பருப்பு கிலோ ரூ. 70-ல் இருந்து ரூ. 65 ஆக குறைந்துள்ளது. கடலை பருப்பு ரூ. 60-ல் இருந்து ரூ. 52 ஆகவும், இரண்டாம் ரகம் ரூ. 48-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

சேலம் வெல்லம் கிலோ ரூ. 40-ல் இருந்து ரூ. 35-க் கும், வேலூர் வெல்லம் ரூ. 42-ல் இருந்து ரூ. 37-க் கும், அச்சுவெல்லம் ரூ. 45-ல் இருந்து ரூ. 38-க்கும், சர்க்கரை கிலோ ரூ. 30-க்கும் கடைகளில் கிடைக்கிறது. கரும்பு விளைச்சல் அதிகமானதால் விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏலக்காய் 100 கிராம் ரூ. 140-ல் இருந்து ரூ. 100-க்கும், முந்திரி ரூ. 550-ல் இருந்து ரூ. 500 ஆகவும், 2-ம் ரக முந்திரி ரூ. 450-க்கும், திராட்சை ரூ. 200-ல் இருந்து ரூ. 180-க்கும் விலை குறைந்துள்ளது. ஜவ்வரிசி ரூ. 70-ல் இருந்து ரூ. 55 ஆக விற்கப்படுகிறது. இதே போல் பொங்கல் பச்சரிசி கிலோ ரூ. 24-ல் இருந்து 20 ஆகவும், பொன்னி புது அரிசி ரூ. 28-ல் இருந்து ரூ. 26 ஆகவும், இட்லி அரிசி ரூ. 22-ல் இருந்து ரூ. 18 ஆகவும் விலை குறைந்துள்ளது.

சில்லறை விற்பனையில் விலை அப்படியே உள்ளது...

ஆனால் சில்லறை விற்பனை கடைகள், காய்கறி கடைகளில் இந்தப் பொருள்களின் விலை குறையவே இல்லை. கரும்பு ஒரு ஜோடி ரூ 40 முதல் 50 வரை விற்கப்படுகிறது.

வெல்லம் இப்போதும் ரூ 50 வரை விற்கப்படுகிறது. சர்க்கரை கிலோ ரூ 40-க்கு விற்கப்படுகிறது. பொன்னி புழுங்கல் அரிசி கிலோ ரூ 34-ம், பச்சரிசி ரூ 36-க்கும் விற்கப்படுகிது.

சமையல் எண்ணெய் விலை வழக்கம் போல அதிகமாகவே உள்ளது. கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை.

English summary
Due to heavy inflow from farmers whole sale price of all grocery items declined sharply. But in retail market, the price is still high and people suffering a lot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X