For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கல் பண்டிகை: இன்று முதல் ஜன. 14 வரை 3080 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்- ஜெ.

Google Oneindia Tamil News

Bus
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3 நாட்களுக்கு 3080 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளாகவும், ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துள் இயக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில்களும் நிரம்பியுள்ளால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மக்கள் வசதிக்காக இன்று 1115 சிறப்புப் பேருந்துகளும், நாளை 1965 பேருந்துகளும் இயக்கப்படும். தேவைக்கேற்ப ஜனவரி 15ம் தேதி பொங்கலன்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி, சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு இன்று 557 பேருந்துகளும், சென்னையிலிருந்து பிற மாவட்டத் தலைநகரங்களுக்கு நாளை 1257 பேருந்துகளும், ஜனவரி 14ம் தேதி 1257 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அனைத்து ரயில்களும், சிறப்பு ரயில்களும் நிரம்பி விட்டன. பஸ்களில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்கள் அத்தனை பேரும் முதலில் ரயில்களுக்கு முந்தியுள்ளனர். தற்போது ரயிலையும் கோட்டை விட்டவர்கள் வேறு வழியில்லாமல் அதிக கட்டணத்தைக் கொடுத்து அரசு பஸ்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அதிக அளவிலான சிறப்பு் பேரு்நதுகளை தமிழக அரசு இயக்கவுள்ளது.

பொங்கலுக்குப் பிறகு ஜனவரி 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை இதே எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha has said that 3080 spl buses to be operated from Chennai to other cities to ease the Pongal rush. The buses will be operated from today and till Jan 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X