For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோழிக்கூடு என நினைத்து கொச்சியில் விமானத்தை இறக்கிய விமானிகள்: பயணிகள் அதிர்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

கொச்சி: திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கூட்டுக்கு செல்ல வேண்டிய விமானம் தவறுதலாக கொச்சியில் இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அல்லையன்ஸ் ஏர் விமானம் 32 பயணிகளுடன் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பியது. அந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கூடு, கொச்சி வழியாக அகதி(லக்ஷதீப்) செல்வது.

விமானம் கோழிக்கூட்டுக்கு பதிலாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கியவுடன் கோழிக்கூடு வந்ததாக பயணிகளிடம் பணியாட்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு கோழிக்கூடு என்று நினைத்து தவறுதலாக கொச்சியில் தரையிங்கியுள்ளதாக விமானி தெரிவித்தார். இதை கேட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து விமானி விமான கட்டுப்பாட்டுக்கு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தான் விமானத்தை தவறுதலாக கொ்ச்சியில் தரையிறக்கியதை தெரிவித்தார். ஆனால் விமானத்தை தவறுதலாக தரையிறக்கவில்லை என்றும், பணியாட்களின் வேலை நேரம் மாற்றப்பட்டதால் தான் நேராக கொச்சியில் இறக்கப்பட்டதாகவும் அந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கோழிக்கூட்டில் இறங்க வேண்டிய பயணிகள் கொச்சி விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு விமானம் லக்ஷதீப் வரை சென்று மீண்டும் திரும்பிய பிறகே அந்த பயணிகள் கோழிக்கூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் சுமார் 4 மணி நேரம் விமான நிலைய்ததில் காத்திருந்தனர்.

English summary
An Alliance air flight was landed in Cochin mistaking it to be Kozhikode. The flight with 32 passengers took off from Trivandrum. It was flying on the Trivandrum-Calicut (Kozhikode)-Cochin (Kochi)-Agathi (Lakshadweep) sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X