For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஆர்ஆர் வட்டி வீதத்தை அதிரடியாகக் குறைத்தது ரிசர்வ் வங்கி... தொழில்துறை உற்சாகம்!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: ரிசர்வ் வங்கி அதிரடியாக 50 புள்ளிகள் அளவுக்கு ரொக்க இருப்பு (சிஆர்ஆர்) வட்டி வீதத்தைக் குறைத்துள்ளதால், தொழில்துறையில் உற்சாகம் நிலவ ஆரம்பித்துள்ளது.

வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்கம் மற்றும் நீர்ம நிலை சொத்துக்களுக்கு தரப்படும் வட்டியான ரொக்க இருப்பு விகிதம் இதுவரை 6 சதவீதமாக இருந்து வந்தது.

ஆனால் தொழில்துறையில் வட்டிகள் உயர்வாக இருந்ததால் பெரும் சுணக்கம் காணப்படுகிறது. எனவே தொழில்துறையில் ரொக்கப் புழக்கத்தை அதிகரிக்க, சிஆர்ஆரைக் குறைக்க முடிவு செய்த ரிசர்வ் வங்கி, 50 புள்ளிகள் அதாவது அரை சதவீதத்தை உடனடியாகக் குறைத்துவிட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், நாட்டில் பணப்புழக்கத்தின் அளவு அதிகரிக்கும். தொழில் துறைக்கும் புதிய முதலீடுகள் அதிக அளவு கிடைக்கும் என்பதால் புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

"இந்த புதிய முடிவால் ரூ 320 பில்லியன் அளவுக்கு ரொக்கப் புழக்கம் அதிகரிக்கும்," என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டி சுப்பாராவ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸில் 180 புள்ளிகள் வரை உயர்வு காணப்பட்டது.

English summary
Indian equities markets cheered an unexpected cut in the cash reserve ratio ( CRR) by the Reserve Bank of India Tuesday as a benchmark index soared to rule 179 points higher soon after the decision was announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X