For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களை நீக்கும் சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, பார்க்லேஸ் வங்கி

By Chakra
Google Oneindia Tamil News

Hsbc
மும்பை: உலகின் முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களான சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, பார்க்லேஸ் ஆகியவை இந்தியாவில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளன.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளால் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கிகள் உலகளவில் வேலைவாய்ப்புகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பணியாளர்களை நீக்கவுள்ளன. சிட்டி பேங்க கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவில் 100 பணியாளர்களை நீக்கியது.

அடுத்ததாக எச்எஸ்பிசி உலகளவில் 3,000 பேரை நீக்கவுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய ஊழியர்கள் ஆவர்.

பிரான்ஸ் நாட்டு வங்கியான பிஎன்பி பரிபாஸ், ராயஸ் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட் ஆகியவை தங்களது சில பிரிவுகளை ஒருங்கிணைத்து, இந்தியாவில் ஊழியர்களைக் குறைக்கவுள்ளன.

2011ம் ஆண்டில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் சுமார் 2 லட்சம் ஊழியர்களை நீக்கவுள்ளன. இதில் இந்திய ஊழியர்களையும் அவை விட்டு வைக்கவில்லை.

இந்தியாவில் இவை லாபகரமாக இயங்கினாலும் பிற நாடுகளில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக இந்திய ஊழியர்களை நீக்குவதை இந்த சர்வதேச நிதி நிறுவனங்களும் வங்கிகளும் ஒரு வாடிக்கையாகவே வைத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கிகளின் யூஸ் அண்ட் த்ரோ பாலிஸியை முறியடிக்க சில முக்கிய திருத்தங்களை ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் வெறும் கிளைகளை மட்டும் தொடங்க முடியாது. அவை இந்திய பிரிவுகளாக மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் இந்திய வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இவை செயல்பட முடியும். தங்களது சர்வதேச விதிகளை இந்திய ஊழியர்கள் மீது திணிக்க முடியாது.

ஆனால், இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று அவை நடைமுறைக்கு வர வெகுகாலம் ஆகலாம். அல்லது, ஏராளமான முதலீட்டைக் கொண்டு வரும் இந்த வெளிநாட்டு நிறுவனங்களை பகைக்க விரும்பாவிட்டால் ரிசவ்ர் வங்கியின் இந்த பரிந்துரைகளையே மத்திய அரசு நிராகரிக்கலாம்.

English summary
Citigroup, HSBC, Bank of America Merrill Lynch and Barclays are slashing jobs in their Indian operations at the fastest pace since the 2008 global credit crisis amid slowing operations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X