For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

13000 பேரை வீட்டுக்கு அனுப்பும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்... பென்ஷன் பிளானும் 'கட்'!

By Shankar
Google Oneindia Tamil News

American Airlines
டல்லஸ்: பிரபல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பணியாளர்கள் 13000 பேரை நீக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஓய்வூதிய திட்டத்தையும் நிறுத்தி வைக்க உள்ளது.

அமெரிக்காவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ். பெரும் நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனம், திவாலாகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக 20 சதவீத செலவுக் குறைப்பை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு அம்சமாக 15 சதவீத பணியாளர்களைக் குறைக்கிறது அந்த நிறுவனம். ஆண்டுக்கு 2 பில்லியன் செலவைக் குறைத்தால் மட்டுமே நிறுவனம் மீண்டும் லாபத்துக்கு திரும்பும் என்பதால் இந்த நடவடிக்கை என அறிவித்துள்ளது.

2001-ம் ஆண்டிலிருந்து 11 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பணியாளர்களின் பென்ஷன் திட்டத்தையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது அமெரிக்கன் ஏர்லைன்ஸ். ஆனால் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு, அதன் மூன்று தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால் தங்களின் இந்த முடிவுக்கு தொழிலாளர் சங்கங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், நிறுவனம் திவாலானதாக அறிவிப்போம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 130000 பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The parent of American Airlines wants to eliminate about 13,000 jobs, as the nation's third-biggest airline remakes itself under bankruptcy protection. The company proposes to end its traditional pension plans, a move strongly opposed by the airline's unions and the U.S. pension-insurance agency, and to stop paying for retiree health benefits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X