For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். பிரதமர் கிலானி வீ்ட்டுக்கு ஆந்தராக்ஸ் பொடி அனுப்பிய பேராசிரியை?

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியின் வீட்டுக்கு வந்த பார்சலில் ஆந்தராக்ஸ் கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சிந்த் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் துணை பேராசிரியை அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. அதை வாங்கிய பாதுகாவலர் ஒருவர் அதில் ஏதோ பொடி போன்ற பொருள் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். இதனால் அவர் இது குறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அவர்கள் அந்த பார்சலை பரிசோதனைக்காக பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த பொடியில் ஆந்தராக்ஸ் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிலானியின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இந்த பார்சலை சிந்த் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் துணை பேராசிரியை ஒருவர் அனுப்பியிருக்கக்கூடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
A parcel received by the security guards in the house of Pakistan Prime Minister Yousuf Raza Gilani contains deadly anthrax. Officials suspect that a female associate professor at Sindh University Jamshoro as the culprit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X