For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வள்ளலார் ஜோதி தரிசனம் : பிப்.7-ல் டாஸ்மாக் கடை மூடல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தை பூச தினத்தை ஒட்டி பிப்ரவரி 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தை பூச தினத்தன்று வடலூரில் ராமலிங்க அடிகள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் வடலூரில் ஜோதி தரிசனம் நடைபெறும். இதனைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்கு வருவது வழக்கம். எனவே வரும் செவ்வாய்க்கிழமை சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய தினத்தில், மதுபான பார்களும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மிலாடி நபி

இதேபோல் நபிகள் நாயகம் பிறந்த தினம் மற்றும் வடலூர் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 5, 7 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த நாள்களில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால், அன்றைய தின மதுபான விற்கக் கூடாது. மேலும், டாஸ்மாக் பார்கள் எதுவும் செயல்படக்கூடாது. மேற்குறிப்பிட்ட நாள்களில் மதுபானங்கள் விற்றல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

English summary
Tasmac shops will close on Feb 5th and 7th due to Milad un Nabi Tai Poosam vallalar Jothi day. The statement announce to government press relese
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X