For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்களது 'டாப்லெட்'டில் ஈரான் துவேஷ வசனம்-இஸ்ரேலுக்கு சாம்சங் கண்டனம்!

By Mathi
Google Oneindia Tamil News

Samsung condemns 'anti-Iran' ad featuring its tablet
சியோல்: இஸ்ரேல் நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாம்சங் கையடக்க கணிணியில் ஈரான் நாட்டுக்கு எதிரான வசனங்களை பயன்படுத்தியதற்கு சாம்சங் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் HOT தொலைக்காட்சியானது புதிய சந்தாதாரர்களுக்கு சாம்சங்கின் கையடக்க கணிணியை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

இது தொடர்பான விளம்பரத்தில், "ஈரானில் இன்னொரு மர்ம குண்டுவெடிப்பா? என்று ஒரு வசனம் இடம்பெறுகிறது. இத்தகைய விமர்சனம் தமது நாட்டை அவமானப்படுத்துவதாக ஈரான் அறிவித்திருந்தது.

ஈரான் நாட்டு நாடாளுமன்றமும் சாம்சங் தயாரிப்புகளுக்கு ஈரானில் தடை விதிப்பது பற்றி பரிசீலிப்பதாக அறிவித்தது.

இதையடுத்து சியோல் நகரில்செய்தியாளர்களிடம் பேசிய சாம்சங் நிறுவன செய்தித் தொடர்பாளர், இஸ்ரேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரத்துக்கும் தமது நிறுவனத்துக்கும் எதுவித சம்பந்தமுமே இல்லை என்றார்.

"எமது நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுவராமலேயே இஸ்ரேல் தொலைக்காட்சி எமதுநிறுவன தயாரிப்பு பற்றிய விளம்பரத்தை இஸ்ரேல் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Samsung Electronics on Saturday condemned an Israeli commercial featuring a Samsung tablet, expressing dismay at Iran's threat to ban its products over the apparently anti-Tehran teaser.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X