For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்த முறைகேடு - மாதவன் நாயர் உட்பட 4 பேர் மீது இஸ்ரோ குழுவும் புகார்

By Mathi
Google Oneindia Tamil News

Madhavan Nair
சென்னை: இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையேயான எஸ் பேண்ட் ஒதுக்கீடு ஒப்பந்தம் முறைகேடானது என்று பி.கே. சதுர்வேதி தலைமையிலான இஸ்ரோ குழுவின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தமக்கு உரிய எஸ் பாண்ட் அலைக்கற்றையை மிகக் குறைந்த விலைக்கு தேவாஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது மத்திய தணிக்கைக் குழுவின் புகார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் சின்ஹா தலைமையில் ஒரு குழுவை பிரதமர் அமைத்திருந்தார். ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் முறைகேடானது என்று சின்ஹா குழு தெரிவித்திருந்தது.

இதனால் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான மாதவன் நாயர் உட்பட 4 விஞ்ஞானிகள் அரசுப் பதவி வகிக்கத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மாதவன் நாயரும் பாட்னா ஐஐடி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இஸ்ரோ அமைப்பும் பி.கே. சதுர்வேதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்திருந்தது. சின்ஹா மற்றும் சதுர்வேதி கமிட்டிகளின் பரிந்துரைகள் இஸ்ரோவின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

இரண்டு குழுக்களுமே ஒப்பந்த முறைகேடுகளை உறுதி செய்தது. முறைகேட்டுக்குமாதவன் நாயர் உட்பட 4 விஞ்ஞானிகள் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளன.

மாதவன் நாயர் கோபம்

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாதவன் நாயர், தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

English summary
A five-member team that probed a controversial deal between Indian Space Research Organisation (ISRO) commercial arm Antrix Corporation and Devas Multimedia has concluded that former chairman of the space agency, G. Madhavan Nair, and three other scientists were responsible for the contract.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X