For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2011ல் சீரடி சாய்பாபா கோவில் வருமானம்: ரூ.401 கோடி ரொக்கம்

By Siva
Google Oneindia Tamil News

ஷீரடி: கடந்த ஆண்டில் மட்டும் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு காணிக்கையாக ரூ.401 கோடி ரொக்கம், 36 கிலோ தங்கம் மற்றும் 440 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது 2010ம் ஆண்டு கிடைத்த காணிக்கையை விட 20 சதவீதம் அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ஷீரடியில் உள்ளது பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில். இங்கு இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரி்ததுக் கொண்டு போகிறது. அதே போன்று கோவில் வருமானமும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அதிகாரி கிஷோர் மோர் கூறியதாவது,

2011ம் ஆண்டு அறக்கட்டளைக்கு 36 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 31கிலோ தங்கம் கிடைத்தது. 2010ல் 320 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. அதை விட அதிகமாக 2011ம் ஆண்டில் 440 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.

நாட்டில் இரண்டாவது பணக்கார கோவில் என்று பெருமை கொண்ட ஷீரடி கோவிலில் கடந்த 2011ம் ஆண்டு ரூ.401 கோடி ரொக்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது. 2010ம் ஆண்டில் கிடைத்த ரூ.322 கோடி ரொக்கத்தை விட 20 சதவீதம் அதிகமாக கிடைத்துள்ளது. வெளிநாட்டு பணத்தில் கிடைத்த காணிக்கையின் மதிப்பு ரூ.6.28 கோடி. 2010ல் ரூ.5.43 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கிடைத்தது என்றார்.

English summary
The famous Shirdi Saibaba shrine has received Rs.401 crore cash, 36 kg gold and 440 kg silver in 2011. The offerings are 20 percent higher than the ones received in 2010, told a top official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X