For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தின விழாவை விட்டு சாய்பாபா கோவிலுக்கு கோத்தபய ஓடியது ஏன்?

By Shankar
Google Oneindia Tamil News

Gotta Saji
கொழும்பு: இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச அந்த நாட்டின் 64வது சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், இந்தியாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே இந்த வழிபாட்டை அவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர நாளான கடந்த 4ம் தேதி தனது மனைவி மற்றும் மகனுடன் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் அவர் வழிபாடு நடத்தியுள்ளார்.

இலங்கை அதிபருக்கு அடுத்து ஆட்சியில் அதிகாரம் செலுத்தி வரும் கோத்தபய ராஜபக்ச சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்காமல், வழிபாட்டுக்காக சென்றது, போர்க்குற்ற விசாரணைகள் விஷயத்தில் அவர் கொண்டுள்ள அச்சத்தை பிரதிபலிப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை மீடியாக்களும் இதே ரீதியில் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ராஜபக்சே அரசு போர்க்குற்ற விசாரணைக்கு எந்த அளவு பயந்து போயுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அவை செய்தி வெளியிட்டுள்ளன.

English summary
SriLankan Defence Secretary Gotabaya Rajapaksa visited Siradi Saibaba temple on 64th Independence day of SriLanka. It was revealed Defence Secretary visited the temple and engaged in religious activities in order to protect him from the war crime allegations made against SriLanka. Gotabaya Rajapaksa visited to the temple of Siradi Saibaba with his wife and son which is located in the Maharashtra state. According to the Colombo political sources such activity of Gotabaya Rajapaksa has created weather he was in sacred to face threats of war crime allegations made against the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X