For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர் விசாக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டது ஒபாமா ஆட்சியில்தான்!

By Mathi
Google Oneindia Tamil News

US Visa
நியூயார்க்: ஒபாமா அரசாங்கத்தின் கடந்த 4ஆண்டுகாலத்தில்தான் அதிகளவிலான இந்தியர்களின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமைத்துறை தகவல்களின்படி இந்தியர்களின் எல்-1 மற்றும் ஹெச்-1பி விசாக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்திய வல்லுநர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்குமான விசாக்கள் பெருமளவு நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய் நிறுவனம் என்ற அமைப்பு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒபாமா பொறுப்பேற்பதர்கு முன்பு எல்-1பி விசா நிராகரிப்பு என்பது 2.8 சதவீதமாக இருந்தது.

சீனா., ஜப்பான் மற்றும் ஜெர்மன் நாட்டினரது விசா நிராகரிப்பு விகிதமும் இதே அளவில்தான் இருந்து வந்தது.

ஆனால் 2009ல் அதாவது ஒபாமா பொறுப்பேற்ற பிறகு இது 22.5 சதவீதமாக ஒரேயடியாக அதிகரித்தது,

மற்ற நாட்டினரது விசா நிராகரிப்பு விகிதமோ 4.1 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக இருப்பதாகவும் விசா நிராகரிப்பு பட்டியலில் இந்தியர்களே அதிகம்பேர் என்றும் ஆய்வு அரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பெரும்பாலான விசா நிராகரிப்புக்கு கூடுதல் ஆவணங்களை அமெரிக்கா கோருவதுதான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை நாடுகளின் விசா நிராகரிப்பு விகிதத்தை தனித்தனியே வெளியிடவில்லை.

இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் கொடுப்பதை கடுமையாக எதிர்க்கும் ஒபாமா அரசு, இந்தியர்களின் விசாக்களை நிராகரிப்பது என்பது எதிர்பார்க்கப்படுகிற ஒன்றுதான் என்பது ஐடி துறையினரரின் கருத்து.

English summary
A new study shows that the US has discriminated against Indians in the grant of professional visas over the last four years, roughly coinciding with President Barack Obama's tenure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X