For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதி்முக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில் திமுக சார்பில் நேற்று வரை விருப்ப மனு பெறப்பட்டது. விருபப மனுக்கள் பரீசிலிக்கப்பட்டு ஒரு சில தினங்களில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிடுவார்.

இந்நிலையில் மதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளோருக்கு நேற்று முதல் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. நெல்லை சந்திப்பில் உள்ள புறநகர் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வினியோக்கிகப்படுகிறது. போட்டியிட விரும்புவோர் ரூ.5000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். நேற்று ஒரே நாளில் 5 பேர் விருப்ப மனுக்களை பெற்றனர்.

டாக்டர் சதன் திருமலைக்குமார்

முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், மாவட்ட துணை செயலாளர் அழகு மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் திரவியம், குருவிகுளம் யூனியன் முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், திருவேங்கடம் நகர செயலாளர் பாலமுருகன் ஆகியோர் நேற்று புறநகர் மாவட்ட செயலாளர் சரவணனிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றனர்.

இதற்கிடையே விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் பணிகள் குறித்த மதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடந்தது. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

English summary
MDMK has announced that those want to contest in the Sankarankovil bypoll should submit the application form tomorrow as it is the last date. The party is keen in winning the poll like ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X